தங்கம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விலை குறைந்த தங்கம்; ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

ஆபரணத் தங்கமானது இன்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராமானது ரூ.7030-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூபாய் 560 குறைந்து ஒரு சவரனானது ரூ.56,240-க்கு விற்பனையாகிறது.

Jayashree A

இன்றைய தங்கத்தின் விலை

இன்று சென்னையில் ஆபரணத் தங்கமானது கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராமானது ரூ.7030-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூபாய் 560 குறைந்து ஒரு சவரனானது ரூ.56,240-க்கு விற்பனையாகிறது.

பங்கு வர்த்தகம்

அதேபோல் இன்று பங்கு வர்த்தகமானது நிப்டி 220 புள்ளிகள் அதிகரித்து 25,220 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. சென்செக்ஸ் 640 புள்ளிகள் அதிகரித்து 82,280 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

மும்பை பங்கு சந்தை

இஸ்ரேல் ஈரான் போரின் காரணமாக சமீப நாட்களாக பங்கு சந்தையானது இறக்கத்தை கண்டுவந்த நிலையில், இரு தினங்களாக ஏற்றத்தைக் கண்டு வருகிறது.

இன்று பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி போன்ற பங்குகள் அதிக லாபத்தை கொடுத்து வருகின்றன. இதனிடையே ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 6.5% ஆக இருப்பதும் இன்றைய பங்குசந்தைகளின் புள்ளிகள் அதிகரிப்பிற்கு ஒரு முக்கியக்காரணம்.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை குறிக்கும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியானது நிதிக்கொள்கைக் குழுவுடன் கூடி ரெப்போ விகித வட்டி தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம்.

சக்திகாந்த தாஸ்

அதன்படி இந்த மாதம் 7ம் தேதி ரிசர்வ் வங்கியானது தனது முதல் கூட்டத்தை கூட்டியிருந்தது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை. கடன்களுக்கான வட்டியானது.6.5% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதால், பங்குச் சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தைக்கண்டது.