தமிழ்நாடு

எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுக்கும் : கமல்

Veeramani

எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’. எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி” என பதிட்டிருக்கிறார்.

ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’.

எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு.
(1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2020

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், “தமிழிலக்கியத்தின் தலைமகன் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் ஒரு சிலை அமைக்கவேண்டும் என்பது பல தசாப்தங்களாக நீடிக்கும் கோரிக்கை. ஒரு தெருவிற்கு அவர் பெயர் வைப்பதற்கே 72 ஆண்டுகள் இவர்களுக்குத் தேவைப்பட்டது.எங்கள் ஆட்சியில் புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும்” என்றார்

கமல்ஹாசனின் மற்றொரு ட்வீட்டில் “ ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது. சீரமைக்கவேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது” என கூறினார்.

தமிழிலக்கியத்தின் தலைமகன் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் ஒரு சிலை அமைக்கவேண்டும் என்பது பல தசாப்தங்களாக நீடிக்கும் கோரிக்கை. ஒரு தெருவிற்கு அவர் பெயர் வைப்பதற்கே 72 ஆண்டுகள் இவர்களுக்குத் தேவைப்பட்டது.எங்கள் ஆட்சியில் புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2020

முன்னதாக, கமல்ஹாசன் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி டிசம்பர் 13 ஆம் தேதி முதல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பரப்புரையின் போதும், இடையிடையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.