தங்களுடைய ஊழல்களுக்கு துணை புரியாத அதிகாரிகளை பழி வாங்கும் அரசாக இந்த அரசு செயல்படுகின்றது. அமைச்சர் உதயகுமார் போன்று பல அமைச்சர்களும் அவர்களின் துறைகளும் ஊழலால் திழைத்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மதுரை மாவட்டத்தில் திமுக சார்பில் "தமிழகம் மீட்போம்" என்ற பெயரில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆலோசனை சிறப்பு பொதுக்கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுது; மதுரை மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் நிலையில், மதுரை மாநகர் மற்றும் புறநகர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக சார்பில் 550 கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டதோடு வருகின்ற சட்டமன்ற தேர்தலின் போது நிர்வாகிகள் செயல்படுவது குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணொளி வாயிலாக நிர்வாகிகளிடம் உரையாற்றிய ஸ்டாலின்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை மண், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் உள்ளிட்ட பல தமிழ் புலவர்கள் வாழ்ந்த மண் தான் இந்த மதுரை மண். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எவ்வளவு கூர்மையானதோ அதேபோல் இங்குள்ள நிர்வாகிகள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
தேவர் திருமகனார் காங்கிரஸ், பார்வட் பிளாக் கட்சியில் இருந்தாலும் திமுக வுடன் நட்பில் இருந்தார். ஒரு காலத்தில் திமுகதான் தமிழகத்தை ஆளும் என தேவர் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் கட்சியாக திமுக இருந்து வருகின்றது. தற்போது நடைபெற்று வருவது அதிமுக ஆட்சி என சொல்ல முடியாது, இது 30 பேர் கொண்ட கும்பல் ஆட்சி.
மத்திய மாநில அரசுகள் மக்களை ஏமாற்றும் அரசு என்பதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், திமுக மதுரையில் உயர்நீதிமன்ற கிளை, பல்வேறு பகுதிகளில் பாலங்கள், மருதுபாண்டியர் சிலை, போன்ற பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மதுரையைச் சுற்றி ரிங்ரோடு, மாட்டுத்தாவணி பேருந்துநிலையம், அதன் அருகே ஒருகினைந்த வேளாண் வணிக வளாகம், சர்வதேச விமான நிலையம் போன்ற பல திட்டங்களையும் திமுகதான் செயல்படுத்தியது.
மதுரையை சிட்னி, ரோம் நகர் போன்று செல்லூர் ராஜும், உதயகுமாரும் மாற்ற வேண்டாம், அதனை மேலும் கெடுக்காமல் இருந்தால் போதும். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்" என்றானாம். அதுபோல அமைச்சர்கள் இருவரும் செயல்பட்டு கொண்டிங்கின்றனர்.
தங்களுடைய ஊழல்களுக்கு துணை புரியாத அதிகாரிகளை பழி வாங்கும் அரசாக இந்த அரசு செயல்படுகின்றது. அமைச்சர் உதயகுமார் போன்று பல அமைச்சர்களும் அவர்களின் துறைகளும் ஊழலால் திழைத்துள்ளது. தற்போது வருமான வரித்துறை, வருமான புணலாய்வுத்துறை, உள்துறை என்ன செய்து வருகின்றது என என்னுடை கேள்வி. தமிழகத்தின் மானம் காக்க அனைவரும் மருதுபாண்டியர்களாக கண்ணகியாக ஒன்றிணைவோம். என்று பேசினார்.