கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“இனி TNSTC-யும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான்..”

தென்மாவட்டங்களுக்கு செல்லும் tnstc பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மக்களின் பயணத்தினை எளிதாக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு என்று பிரத்யேகமாக பயன்பாட்டிற்கு வந்த இந்த பேருந்து நிலையத்தில் இருந்து SETC, ஆம்னி பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது tnstc பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி “நாளை முதல் tnstc பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது, கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும். செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலியிருந்து இயக்கப்படும்” என்று போக்குவரத்துதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.