குரூப் 4 தேர்வு புதிய தலைமுறை
தமிழ்நாடு

வெளியானது TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்! எப்படி அறிவது? பணியிடங்கள் அதிகரிப்பா? முழு விவரம்...

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முடிவுகளை எப்படி அறிவது என்ற முழு விவரம் இங்கே...

ஜெ.நிவேதா

கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப்-4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு, ஜுன்-9 ம் தேதி நடைபெற்று முடிந்தது.

குரூப் 4 தேர்வு

சுமார் 20 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் சுமார் 15,88,000 தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அதன் பின்னர் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. பின் மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயர்ந்தது. இது மேலும் 559 உயரும் என இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 9,491 என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று தற்போது குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது.

எப்படி பார்க்க வேண்டும்?

TNPSC Group 4 2024 Results

www.tnpscresults.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்

உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்

உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்

Capche-வை உள்ளிடவும்

Submit சொடுக்கவும்

(அல்லது)

www.tnpscexams.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்

Group IV Results-ஐ சொடுக்கவும்

உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்

உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்

Capche-வை உள்ளிடவும்

Submit சொடுக்கவும்