தமிழ்நாடு

மீனவர்களுக்காக டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!

மீனவர்களுக்காக டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Rasus

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து #TNFishermen என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த ‌தமிழ‌க மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்சோ என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொரு மீனவர் சாரோன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்களும் தங்களது எதிர்ப்புகளை #TNFishermen என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் உள்ளிட்ட ஏராளனமானக் கருத்துகளை அவர்கள் அதில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #TNFishermen என்ற ஹேஷ்டேக், சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இதனிடையே, மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக உங்களது கருத்துகளை #SaveFishermen என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, உங்களது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கலாம். இந்த கருத்துகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.