போக்குவரத்து தொழிளாளார்களின் பேச்சுவார்த்தை PT
தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி! குழு அமைத்த தமிழ்நாடு அரசு... அடுத்தது என்ன?

போகுவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

Jayashree A

தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டமானது நடைபெற்று வரும் நிலையில் நேற்று (பிப்ரவரி 7) முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடந்தது. இதில் சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மேலும் இவர்களுடன் போக்குவரத்து கழகத்தின் 8 இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் -

போக்குவரத்து தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பின் நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில், போக்குவரத்து சங்கமானது தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது.

இதன் அடிப்படையில் கடந்தமாதம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. இதில் முடிவு எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தையை நேற்று நடத்துவதாக உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தம்

அதன்படி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து சங்கம் மற்றும் தொழிளாளார்களிடையே நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு, அகவிலை தொகை மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளார்களின் கோரிக்கைகள் மற்றும் போக்குவரத்து துறையில் இருக்கும் காலி பணியிடங்களுக்கு நியமனம் மற்றும் தற்காலிக பணியாளார்கள் வேலை நிறுத்தம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. ஆனால் இதுவும் தோல்வியில் முடிந்தது.

இம்முறையும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால், இதன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையானது வருகின்ற 21ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும் நேற்று நடந்த பேச்சுவார்த்தையை குறித்து அவர் செய்தியாளாரிடம் பேசும் பொழுது, “எட்டு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஓய்வூதியருக்கு தரவேண்டிய பணத்தை உடனடியாக தரவேண்டும் என்றோம். மேலும் ஊதிய உயர்வுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றார்கள். நாங்கள் இடைக்கால நிவாரணமாக ரூபாய் 3,000 வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளோம்” என்றார். இதற்கிடையே போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச குழு அமைக்கப்பட்டு இருப்பதாக முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தமிழக அரசு சார்பாக தெரிவித்துள்ளனர்.