+2 தேர்வு முடிவுகள் முகநூல்
தமிழ்நாடு

+2 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக சதம் அடித்தவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி விகிதம் என்ன? முழு விவரம்...

+2 தேர்வு முடிவுகளில், பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்ற விவரம் முதல் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் வரை இந்த தொகுப்பு விவரிக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணி அளவில் வெளியானது. இணையதளத்திலும், எஸ்.எம்.எஸ். வழியாகவும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொண்டனர்.

இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், இதில் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் மாணவிகள் 96.44 சவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகளில், திருப்பூர் மாவட்ட மாணவர்கள் 97.45% பேர் தேர்ச்சி பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளனர். இதுவே சிவகங்கை - 97.42%, ஈரோடு - 97.42%, அரியலூர் - 97.25%, கோவை - 96.97% என தேர்ச்சி விகிதம் இருக்கிறது.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அரசியல் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நேரத்தில், நூற்று நூறு தேர்ச்சியை பெற்று அசத்திய மாணவ மாணவியர் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

பாட வாரியாக 100க்கு 100 பெற்ற மாணவர்கள்:

தமிழ் - 35 பேர், ஆங்கிலம் - 7 பேர், இயற்பியல் 633 பேர், வேதியியல் 471 பேர், உயிரியல் 652 பேர், கணிதம் 2587 பேர், தாவரவியல் 90 பேர், விலங்கியல் 382 பேர், கணினி அறிவியல் 6996 பேர், வணிகவியல் 6142 பேர், கணக்கு பதிவியல் 1647 பேர், பொருளியல் 3299 பேர், கணினி பயன்பாடுகள் 2,251 பேர், வணிக கணிதம் 210 பேர் சதம் அடித்துள்ளனர்

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழ் - 98.64%, ஆங்கிலம் - 98.53% ,இயற்பியல் - 98.48%,விலங்கியல்- 99.04%, புள்ளியியல் - 99.28%, கணினி அறிவியல் - 99.80%, கணிதம் - 98.57% , வரலாறு - 98.57%, பொருளியல் - 97.85% என தேர்ச்சி விகிதம் உள்ளது.