தமிழ்நாடு

கோவை ஈஷா மைய கட்டடங்களுக்கு சிறப்பு அனுமதி: தமிழக அரசு

கோவை ஈஷா மைய கட்டடங்களுக்கு சிறப்பு அனுமதி: தமிழக அரசு

webteam

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மைய கட்டடங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலை அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார்.

இதனிடையே, கோவை ஈஷா யோகா கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தாக்கல் செய்த பதில் மனுவில், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மைய கட்டடங்களுக்கு, சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனத்துறை தடையில்லா சான்று அளித்ததால், மலைதள பாதுகாப்பு குழு சிறப்பு அனுமதி அளித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.