இந்த வழக்கு தொடர்பாக தன் பதில்மனுவை தாக்கல் செய்துள்ள தமிழக காவல்துறை, "கடந்த 15 ஆண்டுகளில் ஈஷா யோகா மையம் இருக்கும் இடத்தில் காணாமல் போனவர்கள் குறித்து ஆறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் ஐந்து வழக்குகள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் இருக்கிறது. காணாமல் போன நபரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம். அதே போல் அங்கு தகன மையம் ஒன்று கட்டப்பட்டுவந்தது. அது தொடர்பாக சுப்ரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது தகன மையம் செயல்படுவதில்லை என மனுதாரர் தரப்பில் கூறியிருக்கிறார்கள். ” என்று தெரிவித்துள்ளது.