தமிழ்நாடு

தமிழக அமைச்சர்கள் மூன்று பேர் வெளிநாடு பயணம்

தமிழக அமைச்சர்கள் மூன்று பேர் வெளிநாடு பயணம்

Rasus

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில் மேலும் சில அமைச்சர்களும் வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் மூன்று அமைச்சர்கள் வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான கே.பாண்டியராஜன் நேற்று காலை எகிப்து புறப்பட்டுச் சென்றார். இது
தவிர சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்மும் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த வாரம் வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார். அத்துடன் தொழிலாளர்துறை அமைச்சரான நிலோஃபர் கபீர், ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றிருந்தார். அதுமட்டுமில்லாமல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் பின்லாந்து சென்றிருந்தார். தொடர்ச்சியாக அமையும் தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.