தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கை: அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை

புதிய கல்விக் கொள்கை: அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை

jagadeesh

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நாளை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உயர்கல்வித்துறை தொடர்பான கருத்துருவை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கவுள்ளார். அதன்பிறகு புதிய கல்வி கொள்கை மீதான கருத்தை தமிழக முதல்வர் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு, கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முறை கைவிடப்பட்டு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.