தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை எப்படி நடத்தப்படுகிறது, உண்மையில் ஊசிப்போடப்படுமா, யாருக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கப்படும் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், புதிய தலைமுறையிடம் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அதில், ''ஒத்திகைக்கு சுகாதாரத்துறையை சேர்ந்த 25 பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 5 அதிகாரிகள், 25 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒத்திகையில் ஈடுபடுவார்கள். பொது சுகாதாரத்துறை இயக்குநரின் மேற்பார்வையில் ஒத்திகை கண்காணிக்கப்படும்.
ஒத்திகையில் தடுப்பூசி போடப்பட மாட்டாது. தடுப்பூசி வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நடத்தப்படும். 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி செலுத்த நேரம் சரியாக இருக்குமா என பார்க்கப்படும். மக்கள் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஒத்திகை பார்க்கப்படும்'' என தெரிவித்தார்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1OHSNqcxmxY" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>