”RSS பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியா? பேரணியில் கலந்துகொள்பவர்கள் யார்? எத்தனை பேர் இருப்பார்கள்? எங்கு தொடங்கி எங்கு முடியும் என்ற எந்த விபரமும் இல்லாமல் அனுமதி கேட்கிறார்கள்” என தென்மாவட்டங்களில் 20 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி வழக்கில் தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
அரசின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.