தமிழ்நாடு

போராடும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதாரத் துறை உத்தரவு

போராடும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதாரத் துறை உத்தரவு

Rasus

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 5 நாட்களாக பணிக்கு வராத அரசு மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மருத்துவர்கள் பணி மூப்பை இழப்பார்கள்.

ஊதிய உயர்வு, இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை, மேல்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.