தமிழ்நாடு

“அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு தகவ‌ல் உண்மையில்லை” - தமிழக அரசு

“அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு தகவ‌ல் உண்மையில்லை” - தமிழக அரசு

webteam

தமிழக‌ அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என ‌சில ‌ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வேலைவாய்ப்பு இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையி‌ல், தமிழக அரசு ஊழியர்களில்‌ 50 வயதை நிறை‌வு செய்தவர்கள் மற்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் குறித்த விவரம் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்காக,‌ இந்த தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை மறுத்துள்ள தமிழக அரசு, அரசு ஊழியர்களின் சுகாதாரம் குறித்த புள்ளிவிவர தகவலுக்காகக் கோரப்பட்டதாகக் கூறியுள்‌ளது. 

இது ஆண்டுதோறும் நடக்கும் கணக்கெடுக்கும் பணி ஆகும் என்றும், இதற்கும் கட்டாய ஓய்வுக்கும் தொடர்பு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது‌. மேலும், அரசு ஊழியர்கள் ஓய்வு குறித்து ஆணையிட வேலைவாய்ப்பு துறைக்கு அதிகாரமில்லை என்றும்‌ பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு மட்டுமே உண்டு எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.