தமிழ்நாடு

மதுபோதை சோதனைக் கருவியை பயன்படுத்த வேண்டாம் - காவல்துறைக்கு உத்தரவு

மதுபோதை சோதனைக் கருவியை பயன்படுத்த வேண்டாம் - காவல்துறைக்கு உத்தரவு

webteam

வாகனம் ஓட்டும் நபர் மது அருந்தியுள்ளாரா ? என சோதனை செய்யும் கருவியை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக வாகன ஓட்டிகளை வாயால் ஊதுமாறு கேட்டு பிரீத்திங் அனலைசர் கருவி மூலம் பரிசோதிப்பதை தவிர்க்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மது அருந்தி வாகனம் ஓட்டுவோரை மிகக் கவனமாக கையாள வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகுந்த தேவை இருக்கும் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விபத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும், குற்றத்திற்கு உரிய நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குடித்துவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கண்காணிக்க காவல்துறை தனிப்படை ஒன்றை அமைக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.