தமிழ்நாடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: ஆளுநர் இன்று முடிவு?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: ஆளுநர் இன்று முடிவு?

Sinekadhara

பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து இன்று அல்லது நாளை ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த நிலையில் ஆளுநர் முடிவு வெளிவராமல் இருந்தது.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் 7 பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் வாய்ப்புக் கொடுத்திருந்தது. உச்ச நீதிமன்ற கொடுத்த அவகாசம் நிறைவடைந்த நிலையில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.