தமிழ்நாடு

விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

வெளிச்சந்தைகளில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை கடைகளில் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுமெ தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்படும் நிலையில் கூட்டுறவுத்துறை சார்பில் குறைந்த விலையில் விற்க அரசு முடிவுசெய்துள்ளது. 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளிட்ட 65 பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுமென கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, கோவை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூரில் இவை விற்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, நாள் ஒன்றுக்கு 14 டன் தக்காளி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.