தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை வரை மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது - மருத்துவ பணிகள் கழகம்

Sinekadhara

தமிழகத்தில் நாளைவரை மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக மருத்துவ பணிகள் கழகம் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மருந்துகள் குறித்தும் சென்னை உயர் நீதிமன்றம்தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. 

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் நாளைவரை மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம் எனவும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை நாளைக்குள் உறுதி செய்யவேண்டும் எனவும், வடமாநிலங்களை போன்று தென் மாநிலங்களுக்கும் விரைந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலோசிக்கவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கூறியது.

அதற்கு, ஆக்சிஜன் ஒதுக்குவதில் எந்தவித குறைபாடும் இல்லை என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.