தமிழ்நாடு

கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை - தமிழக அறநிலையத்துறை அறிவிப்பு

கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை - தமிழக அறநிலையத்துறை அறிவிப்பு

Sinekadhara

திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் கோயில்களில் பக்தர்கள் வராததால் அர்ச்சகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மேலும் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி அன்று இந்த உதவித்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அறநிலையத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.