தமிழ்நாடு

தாம்பரம், பல்லாவரத்திலும் முழு ஊரடங்கு : அரசு அறிவிப்பு

தாம்பரம், பல்லாவரத்திலும் முழு ஊரடங்கு : அரசு அறிவிப்பு

webteam

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் 4 நாட்கள் முழு ஊரடங்கு என அரசு அறிவித்துள்ளது.

அரசு சார்பில் வெளியாகியிருக்கும் அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளிலும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர் பகுதிகளிலும், சிட்லப்பாக்கம், திருநீர்மலை மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26-29 வரையிலும், சேலம் திருப்பூரில் 26-28 வரையிலும் முழு ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.