தமிழ்நாடு

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு

Rasus

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்ட 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

இந்த இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2021-22-ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும் எனவும், மூலதன செலவினம் 14.41 சதவீதம் ஆக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.