தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு

jagadeesh

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு வாக்க எண்ணிக்கை ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதே நேரத்தில் புதுச்சேரி, கேரளா அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேரடியாக சென்று அங்கு இருக்கக்கூடிய கள நிலவரம் தொடர்பாகவும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் காவல் துறையைச்சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் தேர்தல் தேதி அட்டவணையை இறுதி செய்வது குறித்து மூத்த அதிகாரிகளுடன் மாநில வாரியாக ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இன்றும் தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி தொடர்பாக இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு விஞ்ஞான் பவனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்து அறிவிக்க உள்ளார். அப்பொழுது கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

இந்நிலையில் தமிழக்ததில் சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும் என நினைத்திருந்த நிலையில், இப்போது முன்கூட்டியே தேர்தலை ஒரே கட்டமாக தேர்தல் ஆணையம் நடத்தும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.