தமிழ்நாடு

போராட்டத்தைக் கைவிடாத மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்

webteam

போராட்டத்தை வாபஸ் பெறாத மருத்துவர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை மாணவர் சேர்க்கையில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பவேண்டும். போராட்டம் தொடர்ந்தால் எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, இவ்விவகாரத்தில் நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும் என்று நம்புவதாகக் கூறி அரசு மருத்துவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்தார். எனினும் இதர மருத்துவ சங்கங்கள், போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில், போராட்டத்தை வாபஸ் பெறாத இதர மருத்துவர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.