தமிழ்நாடு

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் 

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் 

webteam

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊதிய உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-னின் கீழ்  நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

அத்துடன் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தில் நெசவு செய்பவர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி நெசவு தொழிலாளர்களுக்கான கூலி ஒரு சேலைக்கு 43 ரூபாய் ஆகவும், வேட்டிக்கு 24 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.