தமிழ்நாடு

“தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” - வானூர்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

“தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” - வானூர்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

webteam

உலகின் 9 முன்னணி வானூர்தி நிறுவனங்களைத் தமிழகத்தில் முதலீடு செய்ய முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தலைமையிலான குழு வெளிநாடு பயணம் மேற்கொண்டு முதலீட்டாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தற்போது கொரோனா முடக்கத்திற்குப் பின்னர் மீண்டும் முதலீடுகளை ஈர்க்க பல முயற்சிகளை முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் தொடங்கியுள்ளார். அண்மையில் தமிழகத்தில் புதிய முதலீடுகளைத் தொடங்குமாறு ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதினார். இந்நிலையில் தற்போது போயிங், ரோல்ஸ் ராய்ஸ், ஏர் பஸ், லாக்ஹீட் மார்டின் உட்பட உலகின் 9 முன்னணி வானூர்தி நிறுவனங்களைத் தமிழகத்தில் முதலீடு செய்ய முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் படிப்படியாகக் குறையும் வெயில் : இன்று 3 இடங்களில் சதம்..!