தமிழ்நாடு

இங்கிலாந்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர்

rajakannan

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்தின் சஃபோல்க் நகரில் உள்ள புகழ்பெற்ற நிறுவனத்தின், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மின்சார கட்டமைப்புகளைப் பார்வையிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களிடம் இருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும் 3 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து சென்றுள்ளார். சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் - ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் , அதுசார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், அத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக விவாதித்ததாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்‌பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது, சுகாதாரத்துறை சார்ந்த ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகியிருந்தன.