இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அளிக்கவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்-
இதனிடையே, மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசியல் கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.