தமிழ்நாடு

போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் அறிவிப்பு

போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் அறிவிப்பு

webteam

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டடார். அதில்  "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமுமே நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது."

இந்நிலையில் பொதுத்துறை நிறுவனமான அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு லட்சத்து  44 ஆயிரத்தி 45 அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக அரசு 215 கோடியே 99 லட்சம் ஒதுக்கி செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கூடுதல் செலவின தொகையை ஈடுசெய்யும் வகையில் வழங்கப்படும் மானியத் தொகையை தொடர்ந்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்காக 198 கோடியே 66 லட்சம் வழங்கியுள்ளார். மேலும் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகயையும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.