தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

17 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

உயர்தர முதலீடுகளை ஈட்டுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 27 ஆம் தேதி முதல் 17 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

PT WEB

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈட்டுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பயண அட்டவணையை தமிழ்நாட்டின் தொழில்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி

  • வரும் 27 ஆம் தேதி அமெரிக்க புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்,

  • 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார்.

  • 28 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி வரை, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள முக்கிய நிறுவன அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். (இடையே 29 ஆம் தேதி முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 31 ஆம் தேதி புலம்பெயர் தமிழர்களை சந்திக்கிறார்.)

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • செப்டம்பர் 2ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிக்காகோ செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்,

  • செப்டம்பர் 12ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்கிறார்.

குறிப்பாக பார்ச்சூன் 500 பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் தலைமைகளை, முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார்.

  • செப்டம்பர் 12 ஆம் தேதியே அவர் சென்னை திரும்புகிறார். இடையே செப்டம்பர் 7ஆம் தேதி அன்று, வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

தமிழக முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோள், உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு என தமிழக தொழில்துறை தெரிவித்துள்ளது.