தமிழ்நாடு

2,698 டாஸ்மாக் கடைகள் மூடல் : பட்ஜெட்டில் அறிவிப்பு

2,698 டாஸ்மாக் கடைகள் மூடல் : பட்ஜெட்டில் அறிவிப்பு

webteam

தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட் அறிவிப்பின்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் ஆகும். முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியின் கீழ் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். இந்தப் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். இதன்மூலம் தமிழகத்தின் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டில் டாஸ்மாக் கடைகள் வருவாய் ரூ.6,724.38 கோடி என தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் கடைகள் வருவாய் நடப்பு ஆண்டில் ரூ.7,262.33 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.