தமிழகத்தின் 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க 15 அறிவிப்புகள் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.
- ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு.
- மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு.
- மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நிதி ரூ.10,000இல் இருந்து 25,000 ஆக உயர்வு.
- விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.
- கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்.
- ராமநாதபுரம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
- ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
- தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்.
- அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும்.
- விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி ஒதுக்கீடு.
- வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்.
- மானிய இருசக்கர வாகன திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.
- இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
- இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு.
- அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.66.50 கோடியில் 6 சி.டி ஸ்கேன்கள் மற்றும் 4 எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் வழங்கப்படும்.