அண்ணாமலை PT
தமிழ்நாடு

”முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடனே கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது” - அண்ணாமலை

”அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மறுத்திருந்தால், கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தந்து இருக்காது. கருணாநிதியின் ஒப்புதலுடனே கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார் அண்ணாமலை.

Jayashree A

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக செய்தியாளார்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது அவர், “கச்சத்தீவை தாரைவார்த்து கொடுப்பதற்கு ஒரு மாதம் முன் நடந்த மினிட்ஸ் ஆப் மீட்டிங்கில் வெளி உறவு துறை செயலாளார் கேவத் சிங் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து அவரின் அனுமதியைப் பெற்று, அதன் பிறகு கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பது தெள்ளத்தெளிவாக இந்த 9 பக்க குறிப்பு நமக்கு காட்டுகிறது.

இவர்களுக்குள்ளான இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் வரை நடந்துள்ளது. அன்று கருணாநிதி மறுத்திருந்தால், கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தந்து இருக்காது. கருணாநிதியின் ஒப்புதலுடனே கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.