நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பொது நிதிநிலை அறிக்கையும், நேற்று வேளாண் நிதிநிலை அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்த மசோதா, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் திருத்த மசோதா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு நிதி ஒதுக்க மசோதாவை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்யவுள்ளார்.