முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

சட்டப்பேரவையில் அரசின் தனித்தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஜெ.நிவேதா

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநரின் செயலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக வெவ்வேறு காரணங்களுக்காக வெளிநடப்பு செய்தன.

சபாநாயகர் அப்பாவு

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அரசின் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மீண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஆளுநருக்கே மறுபடியும் அனுப்பப்பட உள்ளது.

ஒருமுறை மட்டுமே தீர்மானத்தை திருப்ப அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால், இனி அவர் தீர்மானத்தை திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை.