தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஒத்திவைப்பு

webteam

கடும் ரகளை காரணமாக சட்டப்பேரவை கூட்டம் முதலில் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவை கூடியதும் மறுபடியும் மூன்று மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று காலை 11 மணியளவில் அவை கூடியது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேசையின் மீதேறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் பேரவையை விட்டு வெளியேறினார். கூட்டம் மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஒரு மணிக்கு அவை மீண்டும் கூடியதும் திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் திமுக உறுப்பினர்கள் வெளியேற மறுத்தனர். அவைக் காவலர்கள் அவர்களை வெளியேற்ற முடியாமல் திணறினர். இதனை தொடர்ந்து, அவை மீண்டும் மூன்று மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.