புவிசார் குறியீடு முகநூல்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட் 2024 - 25 | 10 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு

தமிழகத்தில் உள்ள 10 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான அறிவிப்பை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

PT WEB

2024-25 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, 10 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதன்படி,

“சத்தியமங்கலம் செவ்வாழை,

கொல்லிமலை மிளகு,

மீனம்பூர் சீரக சம்பா,

ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை,

உரிகம் புளி,

புவனகிரி மிதி பாகற்காய்,

செஞ்சோளம்,

திருநெல்வேலி அவுரி இலை,

ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை,

செங்காந்தள் விதை

ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.