தமிழ்நாடு

திருவாரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

திருவாரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

webteam

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் சில தினம் முன்பு அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கி வரும் ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி திருவாரூர் கோட்டாட்சியரும் அலுவலகத்தில்  காலை தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் எஸ்.முருகதாஸ் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். போட்டியிட மனு கேட்டு வந்தவர்களுக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. பின் விண்ணப்ப வினியோகம் தொடங்கி அரைமணி நேரத்திலேயே 8 பேருக்கு விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சேர்ந்த அக்னி ராமச்சந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் என்பதை இன்று மாலை 3 மணிவரை நடைபெறும். மேலும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் முழு சோதனை செய்யப்பட்ட பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.