தமிழ்நாடு

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

EllusamyKarthik

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வை காண லட்சோப லட்ச பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். இந்த முறை கொரோனா தொற்றினால் பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுத்ததோடு எல்லைக்கு சீல் வைத்தது மாவட்ட நிர்வாகம். 

கோயிலுக்குள் பக்தர்கள் வரவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதனால் பெருவாரியான பக்தர்கள் நேரலையில் தொலைக்காட்சி மூலமாக திருவண்ணாமலையில்  தீபம்  ஏற்றப்பட்டதை  கண்டனர். கோயிலின் 2668  அடி உயர மலை உச்சியில் 3500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியை  பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.