பாதிக்கப்பட்ட குழந்தைகள் pt
தமிழ்நாடு

திருப்பூர்: நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள்.. மருத்துவமனையில் அனுமதி

திருப்பூரில் விளையாடிக் கொண்டிருந்தபோது நெல்லிக்காய் எனநினைத்து விஷக்காயை சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

யுவபுருஷ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமத்தில் அருண்குமாரின் மகள் யோகிதா(6), திலகராஜன் மகன் சித்தார்த்(4), சிவானந்தனின் மகள் மோனா ஸ்ரீ(4) ரவிச்சந்திரனின் மகன் கவினேஷ்(3) ஆகிய நான்கு குழந்தைகளும் வீட்டின் அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது நெல்லிக்காய் என்று நினைத்து காட்டாங்காய் என கூறப்படும் விஷக்காயை சாப்பிட்டு வீட்டுக்குச் சென்றபோது திடீரென வாந்தி எடுத்ததால் பெற்றோர்கள் பதற்றமடைந்தனர் .

குழந்தைகளை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். விஷக்காயை சாப்பிட்டதே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கு காரணம் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை மறுத்துவர்கள் அனுப்பிவைத்தனர்.

நெல்லிக்காய் என்று நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் தாராபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.