Mangoes seized pt desk
தமிழ்நாடு

திருப்பூர்: வேதிப் பொருட்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1.2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூரில் வேதிப் பொருட்களை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன 1.2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர்.

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள்

அப்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க்கெட், கேஎஸ்சி பள்ளி சாலை, அரிசி கடை வீதி, வெள்ளியங்காடு மற்றும் பழ குடோன் வீதி ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 3 குடோன்களில் இருந்து, வேதிப் பொருட்களை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன 1.2 டன் அளவிலான மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவருகிறது. இதையடுத்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 மொத்த விற்பனை நிலையங்களுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.