தமிழ்நாடு

வெறும் 44 வாக்குகள்: மன உளைச்சலால் மநீம வேட்பாளர் எடுத்த முடிவு

வெறும் 44 வாக்குகள்: மன உளைச்சலால் மநீம வேட்பாளர் எடுத்த முடிவு

kaleelrahman

தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே பெற்றதால் விரக்தியடைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி (55). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36 வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார். இதனால் தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் 50 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மணி வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்;. இதையடுத்:து தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தினரிடம் வாங்கிய கடனை எப்படி திருப்பி தருவது என தெரியாமல் இருந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணி, நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.