தமிழ்நாடு

காங்கேயத்தில் காளைக்கு பிரம்மாண்ட வெண்கல சிலை அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி உறுதி

காங்கேயத்தில் காளைக்கு பிரம்மாண்ட வெண்கல சிலை அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி உறுதி

kaleelrahman

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், காளைக்கு பிரம்மாண்ட வெண்கல சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

காங்கேயம் பேருந்து நிலையம் அருகே பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்னை விவசாயிகள் அதிகம் நிறைந்த இப்பகுதியில், அவர்கள் ஏற்றம் பெறும் வகையில், நீராபானம் தயாரிக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதேபோல கொப்பரை தேங்காய் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மேலும் உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


ஆசியாவிலேயே பிரம்மாண்டமான கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு மாடு ஒன்று முப்பது லிட்டர் பால் தரும்படி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானிசாகர் பகுதியில் காங்கேயம் காளை இனப்பெருக்க நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது என பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடையே பேசும்போது, ஆனைமலை ஆறு - நல்லாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்கள் முன்னேற்றத்தில் உள்ளன என்றார்.