செய்தியாளர்: சுரேஷ்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த வருடம் 2000 ரூபாயை கடனாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோடீஸ்வரன், வேலைக்காக சிங்கப்பூருக்குச் சென்ற நிலையல், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று மது போதையில் இருந்த மணிகண்டன் மற்றும் கோடீஸ்வரன் இடையே 2000 ரூபாய் கடனை திருப்பிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோடீஸ்வரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில படுகாயமடைந்த கோடீஸ்வரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார், கோடீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை செய்த மணிகண்டன் தப்பியோடிய நிலையில் உடனிருந்த மூன்று பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.