மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

திருப்பத்தூர்: தண்ணீர் பாய்ச்ச சென்ற 3 பேர், சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு – ஒருவர் கைது

இரவில் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற கணவனையும், மகனையும், விதிமீறலுக்கு பறிகொடுத்திருக்கிறார் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த பெண்.

webteam

செய்தியாளர்: சுரேஷ்

திருப்பத்தூர் அடுத்த சின்னமூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். கட்டட தொழிலாளியான இவருக்கு இரண்டு பிள்ளைகள். இந்நிலையில், பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த கரிபிரான் என்பவர், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலைக்காக சிங்காரத்தை அழைத்ததாக தெரிகிறது.

மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

இதையடுத்து மனைவி தீபாவிடம் சொல்லிவிட்டு சிங்காரம் புறப்பட, ஆசையுடன் உடன் சென்றுள்ளார் அவரது மூத்த மகன் லோகேஷ்.. பெருமாபட்டு பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்துக்கு 3 பேரும் (கரிபிரான், சிங்காரம், லோகேஷ்) சென்ற போதுதான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீதி என்பவர் நிலத்தில் போடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 3 பேரும், உயிரிழந்துள்ளனர். கணவர் மற்றும் மகன் வந்துவிடுவர் என காத்திருந்த தீபாவுக்கு, காலையில்தான் வந்து சேர்ந்தது அந்த துயர செய்தி...

சம்பவ இடத்திற்கு ஓடிச்சென்று பார்த்த தீபா, நொறுங்கிப் போயிருக்கிறார். சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நீதி என்பவரை குறிசிலாப்பட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் கணவனையும், மகனையும் இழந்த தீபாவிற்கும், தந்தையையும், சகோதரனையும் இழந்த சிறுவனுக்கும், நீதியின் சட்டவிரோத செயல் ஒரு பெருந்துயரை ஏற்படுத்தியிருக்கிறது.