நெல்லையில் கனமழை புதிய தலைமுறை
தமிழ்நாடு

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பகுதிகள்! கிடைக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் மக்கள்!

நெல்லையில் பெய்துவரும் தொடர் கனமழையால் தாமிரபரணி மற்றும் இணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

PT WEB

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் அதிகனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் ஆற்றோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

நெல்லையில் கனமழை

குறிப்பாக கூடங்குளம் அருகே அணுவிஜய் குடியிருப்புக்கு எதிரே உள்ள பிருந்தாவன் நகருக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன.

களக்காட்டில் இருந்து சிதம்பராபுரம் செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கூடங்குளத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.