தெய்வானை யானையின் வரலாறு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த யானை தெய்வானை தாக்கியதில், பாகன் உதயகுமார் அவரின் நண்பர் சிசுபாலன் மரணமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்போது மட்டுமல்ல, திருப்பரங்குன்றத்தில் இருந்தபோது, காளிதாஸ் என்பவரை இதே யானை தாக்கி அவரும் மரணமடைந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகின..,
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லீலாபோரா என்பவருக்குச் சொந்தமானது இந்த தெய்வானை யானை. இந்த யானைக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ’பிரிரோனா’. அஸ்ஸாமைச் சேர்ந்த இந்த யானையை திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் முதலில் வாங்கினார்.
அவரிடமிருந்து கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், திருச்செந்தூர் கோயிலின் அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த தேவதாச சுந்தரம் விலை கொடுத்து வாங்கி, கோயிலுக்கு வழங்கியுள்ளார்.
அப்போதுதான் ’பிரிரோனா’ என்கிற பெயர், ’தெய்வானை’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்போது தெய்வானைக்கு 6 வயது. முதலில் திருச்செந்தூரில் இருந்த தெய்வானை பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான், உதவி பாகராக இருந்த காவடி காளிதாஸைக் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அதிக மன அழுத்தத்தின் காரணமாக திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்தபோதும் சரண் என்பரை தூக்கி வீசியது. இதனால் யானையை மீண்டும் அஸ்ஸாமுக்கே கொடுத்துவிடுமாறு அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால் தமிழக அறங்காவல்துறை, தெய்வானை முறையாக பராமரிக்கப்படும் என உத்தரவாதமளித்து அந்த யானையை அஸ்ஸாமுக்கு கொடுக்க மறுத்துவிட்டது. அந்த தெய்வானை யானைதான் இப்போது திருச்செந்தூரில் பாகனைத் தாக்கிய தெய்வானை என்கிற செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன..,ஆனால், அந்த தெய்வானை வேறு அதற்கு வயது 19.அந்த யானை இப்போது, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.