தமிழ்நாடு

மீண்டும் ஏன் பணிநியமன ஆணை? - தமிழக அரசு விரிவான விளக்கம்

மீண்டும் ஏன் பணிநியமன ஆணை? - தமிழக அரசு விரிவான விளக்கம்

sharpana

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு பணி வழங்கப்பட்டு விட்டதே பின்னர் மீண்டும் ஏன் பணிநியமன ஆணை? என்ற சந்தேகத்திற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் காண்போம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றினார். 17 பேருக்கும் கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டது. ஆனால், கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்து வந்தது.

 இந்நிலையில், மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சம்மந்தப்பட்ட 17 பேருக்கும் கல்வித் தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தற்போது வழங்கியுள்ளார். ஏற்கனவே அவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 17 பேருக்கும் முன்பு வழங்கப்பட்ட பணியையும், கல்வித் தகுதி அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ள பதவிகளையும் அரசு பட்டியலிட்டுள்ளது.