தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில், குடிபோதையில் இருந்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் முதல் தெருவைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் மாரிமுத்து (45). கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி கீழரதவீதியில் உள்ள தெப்பகுளத்தின் சுவரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமரக தெப்பகுளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து சடலத்தை மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.